பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினரும், வணிக வளாகத்தினரும் மஞ்சப்பை விருது பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் தகுதியான பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினரும், வணிக வளாகத்தினரும் ‘மஞ்சப்பை விருது’ பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "மீண்டும் மஞ்சப்பை" பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் தடையை திறம்பட செயல்படுத்தி, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு "மஞ்சப்பை விருதுகள்" வழங்கப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது.

இதன்படி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக்கை பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவித்து சிறப்பாக செயல்படுத்தும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படும். விருது பெறுவோர்களுக்கு, முதல் பரிசாக ரூ.10 லட்சமும், 2-வது பரிசாக ரூ.5 லட்சமும், 3-வது பரிசாக ரூ.3 லட்சமும் வழங்கப்படும். 

இந்த விருதுக்கான விண்ணப்ப படிவங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் https://thoothukudi.nic.in/ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்தில் உள்ள இணைப்புகள் தனிநபர், நிறுவனத் தலைவரால் முறையாக கையொப்பமிடப்பட்டு இருக்க வேண்டும். 2 கையொப்பமிட்ட பிரதிகள் மற்றும் 2 சி.டி.பிரதிகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 1.5.2023 ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.